Skip to main content

Lifestyle

துளசி செடியைச் சுற்றி வரக் காரணம் அறிவியலா? சமயமா?

Got a minute? Click to answer our survey!

20180124081228153Thulasibanner_main.jpg

அறிவியலும் சமயமும் இணைந்ததே இந்து மதம். துளசி செடியை காலையிலேயே வணங்க வேண்டும் என்பார்கள். காரணம் இல்லாமல் காரியம் இல்லை.

துளசி மனதிற்கு அமைதிப் படுத்தும் மனமும் மருத்துவ குணமும் நிறைந்தது. துளசி நம் ஆரோக்கியத்திற்கு மிக உகந்த ஒரு மூலிகைச் செடி என்பதால் நம் அன்றாட வாழ்வியலுல் துளசி முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.

இதனால்தான் நாம் துளசி நீர் அருந்துவதும், துளசி மாடம் வீட்டில் வைக்க வேண்டும் என பெரியோர்கள் கூறுவதும் காலங் காலமாக உள்ளது.

துளசி பிராணவாயுவை வெளிப்படுத்தும் ஒரு செடியாகும். இதனால்தான் வீட்டில் துளசி செடியை வைக்கச் சொன்னார்கள். காலையிலேயே இந்தச் செடியை சுற்றி வருவதால் நம் உடலுக்கு தேவையான பிராணவாயு கிடைக்கின்றது. அளவான பிராண வாயு நம் மூலையின் இயக்கத்தை சீராக்குகின்றது.

துளசியில் புரதம், நார் சத்து, மாவு சத்துகள் நிறந்துள்ளன.இதனால்தான் துளசி இலையை மென்றோ அல்லது துளசி கலந்த நீரை பருகுகின்றோம்.

மேலும் துளசி இலை சளிப் பிரச்சனையை நீக்கும் ஒரு செடியாகும். தினமும் துள்சி இலையை மென்று விழுங்குவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும். குழந்தைகள் பால் குடிக்காமல் இருந்தால் இந்த இலைச் சாற்றுடன் தேன் கலந்து கொடுக்க பிள்ளைகள் பால் குடிக்கும்.

துளசிச் சாற்றில் எலுமிச்சை சாற்றை கலந்து தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி சிரங்கில் தேய்க்க இந்தப் பிரச்சனை நீங்கும். துளசி சாற்றை புண்ணில் கட்ட புண் சீக்கிரமாக ஆறும்.

சிறிதளாவு துளசி சாற்றை குடித்து, தேள் கொட்டிய இடத்தில் டுளசி சாற்றை ஊற்ற, விஷம் இறங்கும். தேகம் சுத்தமாகி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, ஒரு துளசி இலையுடன் 3 மிளகை விழுங்கி வெந்நீர் குடிக்க வேண்டும்.

தலை சுற்றல் மர்றும் பித்த மயக்கம் நீங்க, துளாசி சாற்றுடன் சக்கரை கலந்து காலையில் ஒரு மேசைக்கரண்டி என 1 வாரத்திற்கு பருக வேண்டும்.

 

புகைப்பட மூலம்: La Paz Group